நினைவாற்றலுக்கு உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும்போது உடலிலிருந்து வெளியேறும்‘ஐரிசின்’ எனப்படும் ஒரு வகை ‘ஹார்மோன்’ மூளை ஆரோக் கியத்தை மேம்படுத்துவதுடன் ‘டிமென்‌ஷியா’ எனப்படும் முது மைக்கால மறதி நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் பாதுகாக்கும் சாத் தியம் உடற்பயிற்சிக்கு உண்டு என்று எலிகளைக்கொண்டு செய் யப்பட்ட ஆராய்ச்சி தெரிவித்து உள்ளது. முதியவர்கள் உடற் பயிற்சியில் ஈடுபடும்போது நரம் பணுக்களில் இணைப்பு வலுவாகி மூளை அணுக்கள் இன்னும் சிறப் பாக இயங்குவதாகக் கூறப்படு கிறது. நினைவாற்றல், பகுத்தறிவு, சிந்தனைத் திறன் ஆகியவற்றைப் பாதிக்கும் ‘அல்ஸைமர்ஸ்’ நோயுடன் வேறு வகை முதுமைக் கால மறதி நோய்கள் ஏற்படுவதை யும் உடற்பயிற்சி தடுக்கிறது. நோய் தீவிரமடையாமல் மெது வடையச் செய்யும் ஆற்றல் உடற் பயிற்சிக்கு உண்டு. இறந்தவர்களின் மூளை திசுக் களைச் சோதனையிட்டதில் ‘டிமென்‌ஷியா’ இல்லாதவர்களின் மூளையில் ‘ஐரிசின் ஹார்மோன்’ இருந்ததாகவும் ‘அல்ஸைமர்ஸ்’ நோயால் இறந்தோரின் மூளையில் இந்த ஹார்மோன் காணப்பட வில்லை என்றும் கண்டறியப்பட்டது. எலிகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும் இதில் கண்டறியப்பட்ட சில முடிவு கள் மனிதனுக்கும் பொருந்தும். உடல் ஒத்துழைத்தால், முதுமைக் காலத்தில் உள்ளவர்கள் மெது நடைக்காவது சென்று நினைவாற் றலை மேம்படுத்திக்கொள்ளலாம்.