ஒவ்வாமை உணவை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்துங்கள்

உணவு ஒவ்வாமை சம்பவங்கள் அண்மைய காலத்தில் உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்திகள் இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட உணவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை சில சமயங்களில் ஏற்படும்போது இந்த எதிர்ப்பு சக்திகள், உணவை ஓர் அந்நிய சக்தியாகக் கருதி உடலைத் தற்காக்க முயலும். இந்த ஒவ்வாமை பரம்பரைப் பிரச்சினையாக இருக்கக்கூடும். பெற்றோரிடம் உள்ள அதே ஒவ்வாமை சில சமயங்களில் பிள்ளைக்கு வருவதும் உண்டு; இல்லாமல் போவதும் உண்டு. ஒவ்வாமையால் ஏற்படும் அறிகுறிகள் மிதமாகவோ கடுமையாகவோ இருக்கலாம்.