மருதாணி நன்கு சிவக்க...

இப்போதெல்லாம், வடஇந்தியத் திருமணங்களைப் போல தமிழர் களின் திருமணங்களிலும் மணப் பெண்ணுக்கு மருதாணியிடுவது முக்கியமான இடத்தைப் பிடித்து விட்டது. அதேபோல, அத்தகைய விசேடங்களில் கலந்துகொள்ளும் பெண்களுக்கும் மருதாணி மேல் ஒரு மயக்கம் இருப்பதை மறுக்க முடியாது.
ஒரு சிலருக்கு மகிழ்ச்சி தரும் மருதாணி, சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துவிடுகிறது. சிலருக்கு மருதாணி நன்றாகப் பிடித்து செந்நிறத்தில் காட்சியளிக்கும். வேறு சிலரோ, மற்றவர்களைப் போல தங்களுக்க்குச் சிவக்க வில்லையே என கவலைப்படக் கூடும். அதற்காக மருதாணியைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. அதை நாம் எப்படி, எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் ரகசியம் அடங்கியுள் ளது.  மருதாணி நன்கு பிடித்து, சிவக்க இதோ சில வழிகள்:

நன்கு சுத்தம் செய்திடுங்கள்

மருதாணி இடுவதற்குமுன், கை களையும் கால்களையும் நன்றாகச் சுத்தம் செய்வது அவசியம். கறை களும் அழுக்குகளும் அகன்று சுத்தமாக இருக்கும்போதுதான் மருதாணியைத் தோல் நன்கு ஈர்த்துக்கொள்ளும்.

பல மணி நேரம் உலரவிடுங்கள்

மருதாணி நன்கு பிடித்து கை சிவக்க வேண்டும் என விரும்பி னால் அதற்குப் பொறுமையும் அவசியம். மருதாணி போட்டபின் சிறிது நேரத்தில் அதை அகற்றி விடாமல் 10-12 மணி நேரம் உலர வைக்கும்போது நன்றாகச் சிவக் கும். பொதுவாக, இரவில் தூங்கப் போகும் முன் மருதாணியிட்டு, காலையில் தூங்கியெழுந்ததும் கழுவுவது நல்லது.

எலுமிச்சைச் சாறு-சீனி ரகசியம்

மருதாணியிட்டு முடிந்ததும் அதன் மேல் எலுமிச்சை நீரும் சீனியும் கலந்த கலவையைக் கைகளின்மீது பூசுங்கள். சிறிது நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீனியையும் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்தால் கலவை தயார்! அதே நேரத்தில், இந்தக் கலவையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத் தினால் அது மருதாணியின் வடி வமைப்பைச் சிதைத்து விடலாம்.

முன்னதாகவே திட்டமிடுங்கள்

மருதாணி செந்நிறத்தில் காட்சி அளிக்கச் சிறிது நேரம் எடுக்கும். ஆகையால், விசேட நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே மருதாணியிடும்போது, விசேட நாளன்று இன்னும் எடுப்பாகத் தோன்றும்.
தண்ணீரை நாடாதீர்கள்

உலர்ந்த மருதாணியை அகற்ற சோப்பையும் தண்ணீரையும் கொண்டு  கழுவுவதைத் தவிர்க்க வும். மாறாக, கத்தி அல்லது கரண்டி கொண்டு அகற்றுங்கள். அதே போல, கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து  அகற்ற முயன் றால் வடிவமைப்பு பாழாகிவிடக் கூடும்.
இவ்வழிகளைப் பின்பற்றினால், மங்கையரின் முகம் வெட்கத்தில் நாணிச் சிவப்பதோடு அவர்களின் கை கால்களும் மருதாணியால் சிவப்பது உறுதி!