நலம் தரும் நோன்பு

நோன்பு இருப்பது வெறும் சமயச் சடங்கு அல்லது அரசியல் சம்பிர தாயம் என யாரும் இனிமேல் கூறிவிட முடியாது.
உண்ணாமல் நோன்பு இருப் பது முதுமையில் ஏற்படும் நோய் களில் இருந்து பாதுகாத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கி யத்தையும் மேம்படுத்தும் என் பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித் துள்ளனர்.
நோன்பு இருக்கும்போது கல்லீரலும் எலும்புத் தசைகளும் தங்களது வளர்சிதை மாற்றத்தை மறுகட்டமைக்கின்றன. இதன் மூலம் உடல் நலம் மேம்பட்டு, முதுமை சார்ந்த சுகாதாரப் பிரச் சினைகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.
நோன்பால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிய கலிஃபோர்னியா-இர்வின் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய் வாளர்கள் எலிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். எலிகளுக்கு 24 மணி நேரத்திற்கு எந்த உணவும் கொடுக்கப்படவில்லை.
உண்ணாமல் இருந்த நேரத் தில் அந்த எலிகளிடம் உயிர்வாயு நுகர்வு, மூச்சு விகிதம், ஆற்றல் பயன்பாடு ஆகியவை குறைந்து காணப்பட்டன. மீண்டும் உணவு உண்ட பிறகு அந்த மாற்றங்கள் எல்லாம் அடியோடு மறைந்து போயின.
இதன்மூலம், குறித்த காலத் திற்கு முறையாக நோன்பு இருப் பது உயிரணுக்களின் செயல்பாடு களை மறுஒழுங்கு செய்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து கிறது என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.