இருட்டில் கைபேசி பார்ப்பதைத் தவிருங்கள்

இரவு நேரத்தில் விளக்கொளி இல்லாமல் இருட்டில் கைபேசி, கணினி, தொலைக்காட்சி போன்ற ஒளிரும் திரைகளைப் பார்க்கும் குழந்தைகள் தூக்கமின்மை, பதற் றமான மனநிலை, உடற்பருமன் போன்ற பிரச்சினைகளால் பாதிக் கப்படுவர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் 11, 12 வயது களில் இருக்கும் 6,616 பிள்ளை களிடம் இருந்து தரவுகள் சேக ரிக்கப்பட்டன. அவர்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள்  தூங்குவதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது கைபேசி போன்ற மின்னிலக்கத் திரைகளைப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் அந்த சாதனங்களைப் பார்ப்பது இருட்டிலா அல்லது வெளிச்சத்திலா, எந்த நாட்களில் பார்க்கிறார்கள், தூங்கப்போகும் நேரம் என்ன, காலையில் எழுந் திருக்கும் நேரம் போன்ற தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அவர்களில் வெளிச்சத்தில் கைபேசி பயன்படுத்திய அல்லது தொலைக்காட்சி பார்த்த பிள்ளை களில் 31 விழுக்காட்டினர் அத்தகைய சாதனங்கள் எதையும் பயன்படுத்தாத பிள்ளைகளைக் காட்டிலும் குறைவான தூக்கத்தைப் பெற அதிக வாய்ப்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
அதே நேரத்தில், இருட்டில் அச்சாதனங்களைப் பயன்படுத்தி யோருக்குத் தூக்கமின்மை பிரச் சினை ஏற்பட 147% வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இப்படி போதிய நேரம் தூங்கா மல் இருக்கும் குழந்தைகள், பதின்ம வயதினரின் நோய் எதிர்ப் பாற்றல் பாதிக்கப்படும். அத்துடன், மனஅழுத்தம், பதற்றமான மன நிலை, உடற்பருமன் ஆகிய பிரச் சினைகளும் தலைகாட்டும்.
உலகளவில் பதின்ம வயதின ரில் 90 விழுக்காட்டினர் ஒன்பது முதல் 11 மணி நேரம் என்ற பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குத் தூங்குவது இல்லை எனக் கூறப் படுகிறது. அதேசமயம், கைபேசி போன்ற திரைச் சாதனங்களில் அவர்கள் செலவிடும் நேரம் கூடி இருக்கிறது.
பிரிட்டனில் மட்டும் 12 முதல் 15 வயதுக்குட்பட்டடோரில் 90 விழுக்காட்டினர் இரவு நேரங்களில் வீட்டில் தொலைக்காட்சி பார்க்கின் றனர்; 90 விழுக்காட்டினருக்கும் மேல் கைபேசியைப் பயன்படுத்து கின்றனர்.
இந்த ஆய்வு முடிவுகள் ‘என் வைரன்மென்ட் இன்டர்நேஷனல்’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளன.
குழந்தைப் பருவத்தில் போதிய நேரம் ஆழ்ந்து தூங்குவது அவர் களின் உடல், மனநலத்தைப் பேணிக்காப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. 
அறிவாற்றலுக்கும் ஆழ்ந்த தூக்கம் அவசியம். போதிய நேரம் தூங்காத பிள்ளைகள் கல்வியிலும் பின்தங்கிவிடக்கூடும்.
“திரைச் சாதனங்களைப் பயன் படுத்துவதற்கும் இளையர்களின் ஆழ்ந்த, போதிய நேரத் தூக்கத் திற்கும் தொடர்பிருப்பதை முந்திய ஆய்வுகள் வெளிப்படுத்தின. இந் நிலையில், எங்களது ஆய்வு முடிவு கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சுகாதார நிபுணர்கள், பதின்ம வயதினர் ஆகியோருக்கும் குறிப் பிடத்தக்க வகையில் உதவும்,” என்றார் ஆய்வுக்குழுவின் தலை வரான திரு மைக்கல் மிரேக்கு.