உலகச் சந்தையில் மிளிரும் சீன வைரங்கள்

கார்பன் எனப்படும் கரிமம் எளிதில் காணப்படும் பொருளாக இருந்தாலும் அதனை மூலப்பொருளாகக் கொண்டுள்ள வைரக்கல் மிக அரிய பொருள். 

பாரம்பரியமாக, வைரக் கற்கள் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பின்பு மெருகூட்டப்படுகின்றன. ஆனால், வைரங்களை நாள் கணக்கில் உற்பத்தி செய்யக்கூடிய புதிய தயாரிப்பு முறைகளை இன்று சீன நிறுவனங்கள் கையாள்கின்றன. இத்தகைய முறைகளால் தயாரிக்கப்படும் வைரக்கற்களுக்கும் வழக்கமான வைரக்கற்களுக்கும் இடையே தோற்றத்தில் எந்த வேறுபாடும் இருப்பது போல் தெரியவில்லை என்று பரவலாகக் கருதப்படுகிறது.

சீனாவில் 10 பில்லியனுக்கும் மேற்பட்ட கேரட் வைரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் தொழிற்சாலையிலுள்ள இயந்திரங்களிலும் கருவிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும், தயாரிப்பு முறைகளுக்கான தொழில்நுட்பங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வர, இத்தகைய வைரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் ஆபாரணச் சந்தைகளில் நுழையத் தொடங்கியுள்ளன.

“ஆபரண வைரங்களை வாங்குவோரில் 3-5 விழுக்காட்டினர் மட்டும் செயற்கை வைர ஆபரணங்களை வாங்குகின்றனர். ஆயினும், இத்தகைய ஆபரணங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரித்து வருகிறது,” என்று ‘என்ட்வர்ப்’ வைர நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Loading...
Load next