தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து

அண்மையில் இந்தியப் பெண் ஒருவரும் அவரின் ஐந்து வயது மகளும் அடுக்குமாடி புளோக் ஒன்றின் கீழ் இறந்து கிடக்கக் காணப்பட்டனர். புளோக் உயரத் திலிருந்து விழுந்த அவ்விருவரில் அந்தத் தாய் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்ததாகக் கூறப்பட் டது.
அனைவரும் தங்கள் வாழ்க் கையில் ஏதோ ஒரு கட்டத்தில் சோகத்தின் பிடியில் சிக்குவது உண்டு. அது வேதனை, இழப்பு, ஏமாற்றம் போன்றவற்றால் ஏற் படலாம்.
ஆனால் சிலருக்கு அந்த வேதனை மிக மோசமாகி, அவர்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்து, இயல்பாக வாழ முடியாத அளவுக்கு மன அழுத்தமாக உரு வெடுக்கிறது. இந்தக் கட் டத்தில் சிகிச்சையை நாட வேண்டிய ஒரு நோயாக அது பரிணமித்துவிடுகிறது.
ஓர் உதாரணத்திற்கு மாறனின் (உண்மை பெயரல்ல) கதையை எடுத்துக்கொள்வோம்.
நல்ல சம்பளத்தை ஈட்டித் தரும் வேலை, இன்பமான இல்லற வாழ்க் கை எனப் பல கனவுகளோடு துடிப்புடன் செயல்பட்டவர் மாறன்.
ஆனால் இளமைப் பருவத் திலேயே அவருக்குள் மனச்சோர்வுக்கான அறிகுறிகள் உருவெடுக்கத் தொடங்கியதை அவர் அப் போது உணரவில்லை.
தம் 18ஆவது வயதில் காதலியுடன் அடிக்கடி ஏற்பட்ட வாக்குவாதங்களால் மனச்சோர்வுக்கு ஆளானார்.
எரிச்சலும் கோபமும் மாறி மாறிக் கட்டுக்கடங்காத அளவுக்கு வரும்.
ஆனால் இவையெல்லாம் இயல்பே என்று ஆறுதல் கூறிக்கொண்டது அவரது உள்ளம்.
பின், அவர் நினைத்தபடி, 30 வயதிற்குள் வீட்டுப் பராமரிப்பு நிர்வாகியாக உயர்ந்து சொந்தமாக ஒரு வாகனத்தையும் வாங்கினார்.
அவருடைய வாழ்க்கையில் அடுத்த முக்கிய கட்டமாக அவருக்குத் திருமணமும் நடந் தது.
ஆனால் தமக்கு மனநலப் பிரச் சினை இருந்ததை உணராமல், உதவி பெறாமலேயே செயல்பட்ட தால் விளைவுகள் மோசமாயின.
ஒருமுறை, உடல்நோவுக்காக சிகிச்சை பெற தேசிய பல்கலைக் கழக மருத்துவமனைக்கு அவர் சென்றிருந்தார்.
அங்கு மனநல மருத்துவமனைக் குச் சென்று சிகிச்சை பெறுமாறு அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மனநல மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, மாறனுக்கு மனச்சோர்வும் முரண் மூளை நோயும் (schizophrenia) இருப்பது தெரியவந்தது.
அவற்றுக்கு ஏற்ற சிகிச்சையும் உடனே தொடங் கியது.
மாறன் 31 வயதாக இருந்தபோது அவருடைய மனைவி திருமணமாகி ஏழாவது மாதத்தில் அவரை விட்டு விலகினார்.
தினமும் மாறனுக்கு எங்கிருந்தோ குரல்கள் கேட்கத் தொடங்கின.
ஆனால் அவை யாவும் அவருடைய மனப்பிரமையே.
இப்படிக் கற்பனையில் பல காட்சிகள் அவர்முன் வந்து போக, தமக்குத் தாமே பேசிக்கொள்வது போல பிறருக்குத் தோன்றும்.
நாளடைவில் அவருடைய நிலைமையைப் பற்றி அறிந்துகொண்ட நண்பர்களும் அவரை விட்டு விலகத் தொடங்கினர்.
அவரது கவனம் இதனால் சிதைய ஒருநாள் அவர் வேலையையும் இழக்க நேரிட்டது.
"சில வேளைகளில் சமூக வலைத்தளங்களில் பலரை அவதூறாகப் பேசியதற்கு மனம் வருந் துகிறேன். அந்நிலையில் என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை," என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார் இவ்வாண்டு 35 வயது பூர்த்தியாகும் மாறன்.
தற்போது அவரின் பெற்றோருடைய வீட்டில் வசித்துவரும் மாறன், மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு தேறி வருகிறார். மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப ஆவலுடன் இருக்கிறார்.
மாறனுடைய கதை நல்ல முடிவை நோக்கிச் செல்வதாகத் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு அவ்வாறு இருப்பதில்லை.
2010ஆம் ஆண் டில் நடத்தப்பட்ட சிங்கப்பூர் மனநல சுகாதார ஆய்வுப்படி பெரியவர்களில் 5.8 விழுக் காட்டினர் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தனர்.
எனவே இந்த மன அழுத்தம் என்றால் என்ன, அதற்கான அறிகுறிகள் யாவை, அதற்கு எதிராக எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம், எங்கே உதவி நாடலாம் போன்ற விவரங்களை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!