கண் ஆரோக்கியத்திற்கும் கவனம் தேவை

ரத்த அழுத்தம், கலஸ்திரோல் (cholesterol) எனும் ரத்த கொழுப்பு, ரத்த சர்க்கரை அளவு போன்ற வழக்கமான மருத்துவச் சோதனைகளுக்கு செல்லும்
முதியவர்கள் சில சமயங்களில் கண் ஆரோக்கியத்தைப் பற்றி மறந்துவிடுகின்றனர்.

ஆண்டில் ஒருமுறையாவது கண் சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனைக்கு செல்ல வேண்டும் என்கிறார் கூ டெக் புவாட் மருத்துவமனையின் கண் மருத்துவர் டாக்டர் மகேஷ்வர் பக்தவத்சலு.

கூரிய பார்வை காட்சி சோதனை (visual acuity assessment), கண் அழுத்த கணக்கீடு, விழித்திரை (retina) சோதனை ஆகியவை கண் சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனையில் இடம்பெறும்.

மூப்படையும் கண் பிரச்சினைகளைத் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து அதற்கான சிகிச்சைக்கு சென்றால், சமூகத்தினரிடையே கண் பார்வையை அநாவசியமாக இழக்கும் சாத்தியத்தைத் தவிர்க்கலாம் என அவர் வலியுறுத்தினார்.

கெட்டரெட்ஸ் (cataracts), விழித்திரை சிதைவு (macular degeneration), நீரிழிவு நோய் தொடர்பான கண் பிரச்சினை (diabetic retinopathy), கண் அழுத்த நோய் (glaucoma), அருகில் இருக்கும் பொருட்கள் அல்லது சிறிய எழுத்துகளை பார்க்க இயலாதது (presbyopia), கண்ணில் தோன்றும் புள்ளிகள் (floaters), நீர்வறண்ட கண்கள் (dry eyes) போன்ற கண் பிரச்சினைகள் மூப்படைவோருக்கு வரலாம்.

நாளடைவில் கண் பார்வை மங்குவது, நேர் கோடுகள் வளைவாக தெரிவது, வண்ண நிறங்கள் கண்ணுக்கு தெரியாதது, பார்வையின் குறிக்களவு குறைதல் (narrowing of the field of view), ஆழத்தை கணிக்க சிரமப்படுதல்; உதாரணத்திற்கு படிக்கட்டில் இறங்கும்போது படியின் ஆழத்தை கணிக்க சிரமப்படுதல், சிவந்த கண்கள், தீடீர் கண் வலி போன்றவை முதியோரின் கண் பார்வைக்கு சிதைவு ஏற்படுகின்றதற்கான அறிகுறிகள்.

இந்த சாத்தியத்தைக் குறைக்கவும் ஆரோக்கிய கண்களை நிலை நாட்டுவதற்கும் சில குறிப்புகளை பகிர்ந்துகொண்டார் டாக்டர் மகேஷ்வர்.

சாப்பிடும் உணவும் ஆரோக்கிய கண்களுக்கும் பங்காற்றும்.

எல்சி-புஃவா (LC-PUFA) எனும் கொழுப்பு அமிலங்கள் (fatty acids) விழித்திரை செயல்பாட்டுக்கு முக்கியமானவை.

உட்கொள்ளும் உணவில் இந்த கொழுப்பு அமிலங்கள் அதிகம் இல்லையென்றால் அது விழித்திரையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.

இந்த கொழுப்பு அமிலங்கள் அதிகமிருக்கும் மாமிச, கடலுணவுகள் உட்கொள்ளுவதன் வழி கண் ஆரோக்கியத்தை நீட்டிக்கலாம்.

பச்சை காய்கறிகளும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புகைப்பிடிப்பதை ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பது உகந்தது.

சூரிய வெளிச்சம் அதிகம் இருக்கும்போது, புற ஊதாக் (UV) கதிர்களிடமிருந்து கண்களை பாதுகாத்துக்கொள்ள வெயில் காப்புக் கண்ணாடிகளை அணிந்துகொள்ளலாம்.

முதியோர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெள்ளித் திரைத் திட்டம் எனும் தேசிய அளவிலான சமூக சுகாதார செயல்பாட்டுப் பரிசோதனை திட்டம் அறிமுகமாகியுள்ளது.

அவர்கள் கண்பார்வை, செவிப்புலன், பல் ஆரோக்கியம் தொடர்பில் பரிசோதனை செய்துகொள்ள திட்டம் உதவுகிறது.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இந்த வெள்ளித் திரை திட்டத்தின் வழி பயன்பெறலாம்.

முன்னோடி தலைமுறைத் திட்ட அட்டை வைத்திருப்போருக்கு இந்த பரிசோதனைகள் இலவசம்.

CHAS அட்டை வைத்திருப்போருக்கு $2 கட்டணம். மேல் விவரங்களுக்கு, 1800 6506060 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!