இலவச மருத்துவப் பரிசோதனை

சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயமும் மவுண்ட் அல்வேனியா மருத்துவமனையும் இணைந்து ஆலயத்தில் நாளை ஞாயிறு காலை 8.30 மணிக்கு இலவச மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளன. BMI, இரத்தப் பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை முதலியவை இலவசமாகச் செய்யப்படும். 40 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் 
இந்தப் பரிசோதனையில் பங்கேற்கலாம். பரிசோதனைக்கு வருபவர்கள் முதல் நாள் இரவு 10 மணியிலிருந்து எதுவும் உண்ணாமல் இருக்க வேண்டும். பரிசோதனை முடிவுகள் மார்ச் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும். அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய தமிழ்ப் பேச்சு நடைபெறும். மேல் விவரங்களுக்கு 9148 2343 அல்லது 9756 7769 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி: sramartemple@gmail.com