மாதாந்திர கவிமாலை

விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 16வது மாடியில் (POD) இன்று மாலை 7 மணிக்கு மாதாந்திர கவிமாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேசிய நூலக வாரிய தமிழ்மொழிச் சேவைப் பிரிவின் தலைவர் து.அழகியபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கவிஞரும் பாடகருமான இசைக்கவி ரமணன் ‘கவிதையே வாழ்க்கையாக’ எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். வழக்கமான அங்கங்களான பிடித்த, வடித்த, படித்த கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம், ‘அன்பே அன்பே’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டி, பரிசளிப்பு ஆகியவையும் இடம்பெறும்.