எச்ஐவி நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த இரண்டாவது நபர்

பிரிட்டனைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், எச்ஐவி நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த இரண்டாவது நபராக இருக்கிறார். எச்ஐவி நோய்த்தடுப்புச் சக்தி உள்ள ஒருவரின் எலும்பு மஜ்ஜை அவருக்கு தானம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு எச்ஐவி நீங்கியிருப்பதாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எலும்பு மஜ்ஜையை தானம் செய்தவரின் மரபணுவில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் மஜ்ஜையப் பெற்ற அந்த ஆடவருக்கு எச்ஐவி கிருமியை எதிர்க்கும் சக்தி உருவானது.

இதுபோன்ற ஒரு சிகிச்சையை 2007ஆம் ஆண்டில் ஜெர்மனியில் மேற்கொண்ட ஆடவர் எச்ஐவி நோயிலிருந்து உலகிலேயே முழுமையாக குணமடைந்த நபராகத் திகழ்கிறார். 

1980களில் தொடங்கிய எச்ஐவி நோய்ப்பரவலால் இதுவரை 35 மில்லியன் பேர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 37 மில்லியன் பேர் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.