‘விழித்திருக்கும் நினைவலைகள்’ நூலுக்கு கரிகால் சோழன் விருது

சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசிய, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் களுக்கு வழங்கும் ‘கரிகால் சோழன் விருது’ 2017ஆம் ஆண்டுக்கு சிங்கப்பூர் எழுத் தாளர் திரு செ. பாலசுப்பிர மணியனுக்குக் கிடைத்துள்ளது. 
சிங்கப்பூரில் இருந்து வந்த 16 நூல்களில் திரு செ. பாலசுப்பிரமணியன் எழுதிய ‘விழித்திருக்கும் நினைவலை கள்’ எனும் நூல் விருதுக் குரியதாகத் தெரிவு செய்யப் பட்டதாக முஸ்தபா தமிழ் அறக் கட்டளையின் நிறுவனர் திரு முஸ்தபாவும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் முனைவர் இரா. குறிஞ்சிவேந் தனும் தெரிவித்தனர்.