அமுதே தமிழே: பாரதிதாசன் பாடல்களுடன் இசை விருந்து      

சிங்கப்பூரில் தமிழ் இசையை வளர்க்கும் நோக்கம் கொண்ட ‘கலாமஞ்சரி’ அமைப்பு தனது மூன்றாவது நிகழ்ச்சியாக ‘அமுதே தமிழே’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தியது. பிப்ரவரி 23ஆம் தேதியன்று கேலாங் ஈஸ்ட் நூலகத்தில் இது நடைபெற்றது. 
காலத்தைக் கடந்து நிற்கும் பாரதிதாசனாரின் எழுச்சிமிகு பாடல்கள் இடம்பெற்ற இந்நிகழ்ச்சி யில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். 
சிங்கப்பூரின் சில இசை மற்றும் நடனப் பள்ளிகளைச் சார்ந்த 70 மாணவர்கள் பாரதி தாசனின் பாடல்களைப் பாடியும் நடனம் ஆடியும் வந்திருப்போரை ஆனந்தத்தில் மூழ்கச் செய்தனர்.
பாரதிதாசன் இயற்றிய இயற்கை, தாலாட்டு மற்றும் தமி ழைப் போற்றும் 11 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டன. கர்நாடக ராகங்களை மையமாகக் கொண்டு இந்தப் பாடல்களுக்கு மெட்டு போடப்பட்டது. 
இயல், இசை, நடனத்தின் மூலம் தமிழுக்கு மரியாதை செய்யும் விதமாக இப்படைப்பு அரங்கேறியது. 
இப்பாடல்களின் ஆங்கிலம் மற்றும் சீன மொழி பெயர்ப்புகள் ஆறு சீனர்களால் வாசிக்கப்பட்டது, சிங்கப்பூரின் சமய நல்லிணக் கத்தைப் பறைசாற்றும் வண்ண மாக இது அமைந்தது. 

பாரதிதாசனார் பாடல்களின் சீன மொழிபெயர்ப்பை நிகழ்ச்சியில் வாசித்துக்காட்டிய சிங்கப்பூர் சீனப் பெண்மணிகள் புடவையுடன் ஒய்யாரமாக காட்சி அளிக்கின்றனர். படம்: கலாமஞ்சரி