‘சிங்கப்பூர் சொல்வெட்டு 555’ நூல் வெளியீடு கண்டது

சிங்கப்பூர் இருநூற்றாண்டு அனுசரிப்பின் ஓர் அங்கமாக ‘சிங்கப்பூர் சொல்வெட்டு 555’ நூலை வெளியிட்டு உள்ளார் திரு மா.அன்பழகன்.
தேசிய நூலக வாரியத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த சொல்வட்டு 555 நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நூலாசிரியர் மா.அன்பழகன், “இது வரலாறு அல்ல, சிங்கப்பூர் வரலாற்றைப் படைத்த 555 தமிழ் மாமனிதர்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய நூல்,” என்று குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இடம்பெற்ற கல்வெட்டுகளைப் பற்றி பேராசிரியர் சுப.திண்ணப்பன் படங்களோடு விளக்கியதோடு கல்வெட்டுப்போல் உருவாகி இருக்கும் இந்தச் சொல்வெட்டு நூல் வெல்வெட்டுப் போன்றது என்று சொல்லி வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரித்து தந்த திரு அன்பழகனின் செயலைப் பாராட்டினார்.

இதைப்போன்ற வரலாறு களை எழுதும்போது நூலாரியர் எதிர் கொள்ளும் சிரமங் களையும் சவால் களையும் சொல்லி எதிர்கால இளையர் களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் இது என்று கூறினார் நாடாளுமன்ற நியமன முன்னாள் உறுப்பினர் இரா.தினகரன்.
103வது வயதில் அடியெடுத்து வைக்கும் முன்னாள் தலைமை அஞ்சல்துறை அதிகாரியான திரு எம்.பாலசுப்பிரமணியன் தம்மை விட வயதில் நூற்றாண்டு இடைவெளியுடைய நான்கு வயது சிறுமி நித்திலாவிடம் நூலை வழங்கி வெளியிட, அதே நேரத்தில் அமர்ந் திருந்த அனைவரிடமும் அவரவர் இடத்திற்கே சென்று தொண்டர்கள் நூலைக் கொடுத்தனர்.
நிகழ்ச்சிக்கு ஆதரவளித்த லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத் (லிஷா)  தலைவர்  ராஜ்குமார் சந்திரா குழு வினர் தலைமையில் ஏழு பெண்கள் பெரியவருக்கு வரிசை எடுத்து வந்தார்கள்.  

திரு பாலசுப்பிரமணியனுக்கும் அவரது மனைவி டாக்டர் சுபத்திரா வுக்கும் சிறப்பு செய்து கேக் வெட்டி 103வது பிறந்த நாள் விழா அனைவரின் வாழ்த்துகளுடனும் இனிதே நடந்தேறியது.