இணையத்தில் 1,156 அரிய தமிழ் நூல்கள்

தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 1,156 அரிய நூல்கள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் படித்துப் பயன்பெறுவதற்காக இணையத் தளத்தில் சனிக்கிழமை பதி வேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2018, 2019ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய நூல்கள் மின்னிலக்கமாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்தப் பணிக்கு ரூ.39,34,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,156 அரிய நூல்களின் 2,18,558 பக்கங்கள் மின்னிலக்கம் செய்யப்பட்டன.  அந்த நூல்களைச் சென்னை தரமணியில் சனிக் கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், க.பாண்டியராஜன் ஆகியோர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவேற்றம் செய்தனர்.