‘கவிதையும் காட்சியும்’

தமிழ்மொழி மாத விழா 2019க்கு ‘கவிதையும் காட்சியும்’ என்ற போட்டியை நடத்தும் வாசகர் வட்டம் அமைப்பு, மாணவர்களைப் போட்டிக்குத் தயார் செய்ய பயிலரங்கு ஒன்றைக் இம்மாதம் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை கேலாங் நூலகத்தில் நடத்தியது. 
கவிதைவரியில்  உறைந்து கிடக்கும் பாடுபொருளை, உணர்வைக் கச்சிதமாய் உள்வாங் கிக்கொள்வது எப்படி என்று உள்ளூர் வெளியூர் கவிதை களுடன் விளக்கினார் திருமதி பாரதி மூர்த்தியப்பன். 
அதே கவிதைமொழியின் உயிரைக் காமிராவில் வெளிக் கொணரும் தொழிற்நுட்பம் குறித்துப் புகைப்பட உதாரணங் களுடன் பயிற்றுவித்தார் மீடியாகார்ப் நாடகங்கங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவரும் திரு கந்தசாமி கோபால். 
பல்வேறு பள்ளிகளிலிருந்து பங்கேற்ற ஏறத்தாழ 30 மாண வர்கள் இப்பயிலரங்கில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

போட்டி பற்றிய விதிமுறைகள்
போட்டியில் உயர்நிலைப் பள்ளிகள், அதற்கு மேற்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கெடுக் கலாம்.
 போட்டியில் பங்கெடுக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்ப மான சிங்கப்பூர் கவிதையைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய உணர் வையும் நிலையையும் பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்களை எடுத்து அனுப்ப வேண்டும். 
ஒருவர் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒரு கவிதைக்கு ஒரு படம் மட்டுமே அனுப்ப வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் கவிதை, தேர்ந்தெடுக்கப்படும் படம், போட்டியில் பங்கெடுக்கும் மாணவரின் பெயர், மின்னஞ்சல், முகவரி, புகைப்படம், கைபேசி எண் ஆகியவறை vaasagar vattamsg@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
அனுப்பப்படும் புகைப்படங் களிலோ கவிதை படங்களிலோ  பெயர், முகவரிகளை எழுதக் கூடாது. 2019-03-17 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற சிங்க்கப்பூர் சூர்யா. கோப்புப்படம்: விஜய் டிவி

22 Apr 2019

சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை