ஐரோப்பாவின் முதல் கடலடி உணவகம்

ஐரோப்பாவின் முதல் கடலடி உணவகம் நார்வேயில் புதன்கிழமை (மார்ச் 20)  திறக்க உள்ளது. 

ஸ்னோஹெட்டா என்ற கட்டடக்கலை நிறுவனம் இந்த உணவகத்தை வடிவமைத்துள்ளது. ஓஸ்லோவிலுள்ள ஓப்ரா ஹவுஸ் அரங்கத்தையும் நியூயார்க்கிலுள்ள ‘செப்டம்பர் 11’ அரும்பொருளகத்தையும் இந்நிறுவனம் உருவாக்கியது.

‘அண்டர்’ என்பது இந்த உணவகத்தின் பெயர். ‘அதிசயம்’ என்பது இந்த நார்வேய சொல்லின் பொருள்.

இங்கு 40 விருந்தாளிகள் வரை உணவு உண்ணலாம். கடலுணவு சார்ந்த 18 வகை பதார்த்தங்களைச் சாப்பிடுவதற்கான மொத்த கட்டணம் 3,700 கிரௌன் ( 586 வெள்ளி) வரை போகலாம்.

இதுபோன்ற உணவகங்கள் உலகில் ஒரு சில மட்டுமே உள்ளன. மாலத் தீவுகள் உள்ளிட்ட வெப்ப மண்டல நாடுகளில் இத்தகைய உணவகங்கள் காணப்படலாம்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர்.

18 Apr 2019

இசைச்சுவையுடன் நகைச்சுவை