மெர்டேக்கா, முன்னோடி தலை முறையினருடன் சேர்ந்து சமூக தினத்தை கடந்த 24ஆம் தேதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் ஏற்பாடு செய்திருந்தது. முதல்முறையாக நடத்தப்பட்ட இந்தச் சமூக தினத்தில் ஸ்ரீ நாராயண மிஷனில் வசிக்கும் குடியிருப்பாளர்களும் நீ சூன் தெற்கு, நீ சூன் மத்திய பகுதி களைச் சேர்ந்த மூத்த குடி மக்களும் கலந்துகொண்டனர். சமூக, குடும்ப மேம்பாட்டுக் கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் பேராசிரியர் ஃபைசல் இப்ராகிம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். வருகையளித்த மூத்த குடி மக்கள் ஆலயத்தின் பிரதான சன்னதிக்கு அழைத்துச் செல் லப்பட்டு குழுவாகப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. சிறப்பு விருந் தினர் காலை உணவு வழங்கு தலைத் தொடங்கி வைத்து மூத்த குடிமக்களுக்கு உணவுப் பரிமாறினார். மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை உணவு பரிமாறப்படும். சுமார் 80 பேர் கலந்துகொண்ட சமூகத் தின விழாவில் சிங்கே விழாவில் நிகழ்த்தப்பட்ட நடனத்தை மீண்டும் ஆடி மகிழ் வித்தனர் ரிதம் அஸ்தேடிக் கழகத்தினர். சீன, மலாய், இந்திய குடியிருப் பாளர்கள் பின்னர் கலந்துரையாட லிலும் நடனங்களிலும் ஈடுபட்டு மகிழ்ச்சியடைந்தனர். தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 35 மாணவர்களுக்குக் கல்வி உபகாரச் சம்பளம் இந்த விழாவில் வழங்கப்பட்டது. ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தின் முதல் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கும் விழாவில் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 28 பேருக்கு தலா $100 ரொக்கமும் $50 பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன. உயர்கல்வி நிலையங்களில் பயிலும் ஏழு மாணவர்களுக்கு $250 ரொக்கமும் $50 பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சமூக தினம்
2 mins read
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திரண்டிருக்கும் நீ சூன் மத்திய பகுதிகளைச் சேர்ந்த மூத்த குடிமக்கள். படம்: ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம். -

