திராவிடரின் 'பக்கத்து வீட்டுப் பசங்க'

திராவிடரின் 'பக்கத்து வீட்டுப் பசங்க'

2 mins read
52414c85-c255-4178-a5cc-f96abcdd6370
-

உள்ளூர் ராப் இசைக் குழுவான திராவிடர் இசைக்குழுவின் 'பக்கத்து வீட்டுப் பசங்க' என்ற இசைத் தொகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை 31ஆம் தேதி அன்று வெளியீடு காணவுள்ளது. உள்ளூர் இசைத்துறையில் 2009ஆம் ஆண்டு முதல் பங்காற்றி வரும் டிஜே சத்யா, முக்தி (படம்) இணைந்து உருவாக்கியுள்ள திராவிடர் ராப் இசைக் குழு பல நிகழ்ச்சிகளில் தங்களது திறமையைக் காட்டி வந்துள்ளது. வேட்டை தொலைக்காட்சித் தொடரில் இடம்பெற்ற கெட்டபுள்ள பாடல் உட்பட பல பாடல்களைப் பாடி பிரபலமானவர் டிஜே சத்யா. சிங்கப்பூரின் 1980, 1990களின் கால கட்டத்தை இந்த இசைத் தொகுப்பில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். சிங்கப்பூரின் நகர வாழ்க்கையைச் சித்திரிக்கும் பாடல்கள் இந்தத் தொகுப்புக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. சூப்பர் சிங்கர் வெற்றியாளர் பிரியங்கா, இரண்டாம் பரிசு வென்ற பிரவின் சைவி, ஏடிகே எனப்படும் ஆரியன் தினேஷ் கனகரத்னம், பிரிட்டிஷ் பிரபலங்களான டீஜே, எம்சி சாய், மலேசிய பிரபலங்கள் சீஷே, பாலன் காஷ்மீர், சியோமந்திரா, சிங்கப்பூர் பிரபலம் திரு டிகே, பிளாக் அண்ட் வைட் ஆகியோர் இந்தத் தொகுப்பில் பாடியுள்ளனர். 2018ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலமாக இந்த இசைத் தொகுப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாக குழு கூறியது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 31ஆம் தேதி, மாலை 6 மணி மதல் 9 மணி வரை, கோல்டன் மைல் ரெக்சில் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. 8750 2105 என்ற எண் மூலம் வாட்ஸ்அப் செயலி மூலமும் இந்த டிக்கெட்டுகளை வாங்கலாம்.