முத்தமிழ் விழா

முத்தமிழ் விழா

2 mins read
e77464b7-5ed3-45bd-a3a5-e2f2c23d0396
முத்தமிழ் விழாவின் சிறப்புப் பேச் சாளர் முனைவர் க.சுபா‌ஷினி. -
Google News Preferred Icon

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் முத்தமிழ் விழா வரும் ஞாயிற்றுக் கிழமை, மார்ச் 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும். கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சிக் குழுவின் ஏற்பாட்டில் வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தமிழ் மொழி விழாவின் ஒரு பகுதியாக முத்தமிழ் விழா நடைபெறும். நாடாளுமன்ற நியமன உறுப்பினரும் அமைதியின் ரோஜாக்கள் அமைப்பின் நிறுவனரும் தலை வருமான திரு முகமது இர்ஷாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். ஜெர்மனியில் தமிழ் மரபு அறக்கட்டளையைத் தொடங்கியவர்களில் ஒருவரும் தற்போதைய அதன் தலைவருமான முனைவர் க. சுபா‌ஷினி 'தமிழ்ச் சுவடுகள் - வரலாறும் வாழ்வும்' எனும் தலைப் பில் சிறப்புரையாற்றுவார். இவ்வாண்டும் வழக்கம்போல் உள்ளூர் எழுத்தாளர் ஒருவருக்குத் தமிழவேள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும். அத்துடன் பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை நடத்தப் பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பும் இடம்பெறும். பொது மக்களுக்கான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். சின்னஞ் சிறார்களின் மாறு வேடப் போட்டியின் இறுதிச் சுற்று பார்வையாளர் மனங்களைக் கொள்ளை கொள்ளும். இவ் வாண்டு இப்போட்டியில் வித்தியாச மான கதாபாத்திரங்களை கண்டு ரசிக்கலாம். அத்துடன் கண்கவர் நடனம், தொடக்கப்பள்ளி மாணவர்களின் கதை சொல்லும் திறன், பேச்சுத் திறன் ஆகியவை, நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். தமிழ்த் தேன் பருக அனைவரும் வருகைதந்து சிறப் பிக்க வேண்டுமென சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் அன்புடன் அழைக்கிறது.