ரத்தத்தை விருத்தி செய்யும் உலர் திராட்சை

ரத்தத்தை விருத்தி செய்யும் உலர் திராட்சை

1 mins read

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துகளை விடவும் உலர் திராட்சையில் ஏராளமான சத்துகள் பொதிந்துள்ளன. ரத்தத்தில் 'ஹீமோகுளோபின்' அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையைச் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். ரத்த விருத்தியும் அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர இந்தக் காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாகக் கழுவி, அதை பசும் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறவைக்கவும். பின்னர் அதிலி ருக்கும் பழங்களைச் சாப்பிட்டு, அந்த பாலைக் குடித்தால் மலச் சிக்கல் வராது. செரிமானப் பிரச்சி னைகளும் குணமாகும். திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களாகத் தேர்வு செய்து அதைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்து கின்றனர். இந்த உலர் திராட்சை யில் உள்ள கால்சியம் சத்து எலும்பு, பற்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும் அமினோ அமி லங்களுடன் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகளும் அதிகம் ஏற்படாது என சத்துணவு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.