சிங்கப்பூரில் உள்ள பொது இடங்களில் துடிப்புமிக்க நடவடிக் கைகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு பழைய தேசிய விளையாட்டரங்கம் தற் போது இல்லாவிட்டாலும் அதன் தொடர்பான நினைவுகள் இன்னும் நம் மனதில் பசுமையாக இருக் கின்றன. பழைய தேசிய விளையாட் டரங்கம் 2010ஆம் ஆண்டில் இடிக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்த மரத்தால் செய்யப்பட்ட இருக்கைகள் பாதுகாக்கப்பட்டன. அவை மரீனா பேயில் உள்ள பொது இடங்களில் பார்ப்பவரைக் கவரும் இருக்கைகளாக வைக்கப் பட்டுள்ளன. காலியாக இருக்கும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு துடிப்புமிக்க நடவடிக்கைகளை நடத்துவது குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையம் கடந்த புதன்கிழமை அறிவித்தது. பொதுமக்களை ஒன்று இணைக்கும் நடவடிக்கைகளை நடத்தும் ஆர்வம் சமூகத்தில் அதிகரித்து வருவதை ஆணை யத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். "பொது இடங்கள் நமது நாட்டின் வரவேற்பறை போன்றவை. நன்கு வடிவமைக்கப்பட்ட, நல்ல திட்டங்களுடனான பொது இடங்கள் சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும். "மக்களின் வாழ்க்கைத் தரத் தையும் அவை மேம்படுத்தும்," என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். பொது இடங்களைத் துடிப்புமிக்கவையாக மாற்றி அமைக்க பொதுமக்களை ஊக்கு விக்கும் திட்டம் 'பிளே இட் ஃபார்வர்ட்'. இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் நன் கொடை அளிக்கப்பட்ட பியானோ இசைக்கருவிகள் பள்ளிகள், சமூக நிலையங்கள் போன்ற இடங்களில் பொதுமக்களுக்காக வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது சிங்கப்பூரில் நன்கொடையாக அளிக்கப்பட்ட 30 பியானோக்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகப் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பியானோக்களைப் பராமரிப்பதற்கான செலவை சில அமைப்புகள் ஏற்றுக்கொண் டுள்ளன.
துடிப்புமிக்க பொது இடங்கள்
2 mins read
-

