ஆண்டுதோறும் நடைபெறும் ஈசூன் இன்னோவா கல்லூரியின் கருத்தரங்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது. இவ்வாண்டு கருத்தரங்கின் கருப்பொருள் = 'இளையரும் சமூக ஊடகங்களும்'. தமிழ்மொழி மாதத்தின் ஒரு நிகழ்வாக இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தின ராக கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டிலிருந்து ஊடகத் துறையில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் திரு 'டியுட்' விக்கி சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்ள இருக்கிறார். கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவோர் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்துகொள்ள இந்த இணைப்பைப் பயன்படுத்துக: https://goo.gl/forms/jujSEa0CTxqdN9DW2. அடுத்த மாதம் 3ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
தமிழ்மொழி இலக்கியக் கருத்தரங்கு
1 mins read

