நெடுங்காலம் ஆகியும் மழுங்காத கூர்மை - எதனால்?

நெடுங்காலம் ஆகியும் மழுங்காத கூர்மை - எதனால்?

1 mins read
29ecd686-61e4-4c20-bb24-e9018a9dfdfc
-

சீனாவின் சுடுமட்சிலை வீரர்களுடன் (Terracotta Warriors) புதையுண்ட உலோக ஆயுதங்கள் இன்னும் பளபளப்பாகவும் கூர்மையாகவும் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக வியப்படைகின்றனர்.

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த ஆயுதங்கள் தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதற்கு குரோமியம் என்ற உலோகத்தின் பயன்பாடு காரணம் என்ற கருதுகோள் நீண்ட நாளாக இருந்துவந்தது. புராதனக் காலத்திற்கு அப்பாற்பட்ட பதன முறையை அப்போதைய சீனச் சிற்பக் கலைஞர்கள் பயன்படுத்தியிருந்ததாகக் கருதப்படுகிறது.

ஆயினும், 464 பித்தளை ஆயுதங்களையும் உலோகப் பாகங்களையும் ஆராய்கையில், இந்த ஆயுதங்கள் பாதுகாக்கப்பட்டதற்கு ஒரு வகையான எதிர்பாராத நிகழ்வே காரணம் என்று அண்மையில் வெளிவந்த ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ஆயுதங்களில் கலக்கப்பட்ட தகரம், சுடுமட்சிலை வீரர்கள் புதையுண்ட மண்பகுதி ஆகியவற்றின் தனித்தன்மை வாய்ந்த ஒருங்கிணைப்பே இந்த ஆயுதங்களின் தரம் காலப்போக்கில் தேயாமல் இருந்ததற்கான ரகசியம் என்கிறது ஆய்வறிக்கை.

இந்தச் சுடுமட்சிலை சேனையில் ஆயிரக்கணக்கான இயல்புருவ அளவிலான வீரர் சிலைகள், குதிரைகள் ஆகியவற்றுடன் பித்தளை தேர்களும் ஆயுதங்களும் உள்ளன. 1974ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இது, இருபதாம் நூற்றாண்டின் ஆகப் பெரிய அகழாய்வுக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.