தமிழ் மொழி விழாவில் பொம்மலாட்டம்

இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவின் ஓர்  அங்கமாக சியாமா அமைப்பு தமிழர்களின் மிகப்பழமையான, அருகி வரும் கலையான பொம்மலாட்டத்தை வரும் 12ம்தேதி  வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் அரங்கேற்றுகிறது.

பொம்மலாட்டம் என்பது சிறிய மரப்பொம்மைகளை கொண்டு கதாபாத்திரங்க்களை உருவாக்கி வசனம் இசைக்கு தகுந்தாற்போல் பொம்மைகளை இயக்கி நடைக்க வைக்கும் ஒரு அற்புதக்கலை.
இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியில் தமிழின் தொன்மையான திருமுறைகள் நமக்கு கிடைப்பதற்கு காரணமாக  இருந்த சோழப் பேரரசன் இராஜ ராஜ சோழனின் வரலாற்றையும் அவன் திருமுறைகளை கண்டெடுத்த கதையினையும் “ திருமுறை கண்ட சோழன்” என்ற தலைப்பில் தமிழத்தின் கும்பகோணம் நகரைச் சேர்ந்த முருகன் சங்கீத பொம்மலாட்ட சபா குழுவினர் அரங்கேற்றுகின்றனர்.
மிகவும் தொன்மையான இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியினை, ரசிகர்களின் பெரும் ஆதரவினால் வியாழக்கிழமை 11ம் தேதியும் மாலை 7:30 மணிக்கு ஒரு காட்சி நடைபெறுகிறது.
அனைவரும் குறிப்பாக மாணவர்கள்  கண்டுகளிக்க வேண்டிய அரிய நிகழ்ச்சி.
மேல் விவரங்க்களுக்கு http://www.syama.org அல்லது ஏற்பாட்டாளார் திரு. இராம்குமார் அவர்களை 97696747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.