வயிறு குலுங்கச் சிரிப்பு, கை நிறைய பரிசு

சிங்கப்பூரர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பதோடு கையில் பணத்தையும் பரிசாகக் கொடுக்க உள்ளனர் அப்போலோ செல்லாப்பாஸ்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (14/04/2019) நடைபெறவுள்ள ‘சிரிக்கப் போகுது சிங்கப்பூர்’ நகைச்சுவை நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு நடத்தப்படும் அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுகள் அள்ளித் தரப்படும். நாளைய நிகழ்ச்சியில் நடைபெறும் அதிர்ஷ்டக் குலுக்கில் பார்வையாளர்கள் முதல் பரிசாக $2,000, இரண்டாம் பரிசாக $1,000, மூன்றாம் பரிசாக $500 ஆகியவற்றை வெல்ல வாய்ப்புப் பெறுவார்கள்.

விஜய் ‘டிவி’ தொலைக்காட்சியின் ‘கலக்கப் போவது யாரு’ நகைச்சுவை நிகழ்ச்சியில் அசத்தும் பல பிரபலங்கள் நாளை உங்களைக் கவலைகளை மறந்து நகைச்சுவை மழையில் நனைய வைக்கவுள்ளனர்.

இந்த முழுநீள நகைச்சுவை நிகழ்ச்சியைப் படைக்க  விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா,  நகைச்சுவைக் கலைஞர்கள் ‘தாடி’ பாலாஜி, ஈரோடு மகேஷ், சதீஷ் குமார், அஸார், வடிவேல் பாலாஜி, அறந்தாங்கி நிஷா என்று  ஒரு நட்சத்திரப் பட்டாளமே இங்கு படையெடுத்து வருகிறது.

சிங்கப்பூரின் ‘அப்போலோ செல்லப்பாஸ்’ வழங்கும் இந்த நான்கு மணி நேர நகைச்சுவை நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி ‘ஸெப்@பிக்பாக்ஸ்’ (Zepp@Bigbox) அரங்கில் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும்.

நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை லிட்டில் இந்தியாவில் உள்ள அப்போலோ செல்லப்பாஸ், 68/69 சிராங்கூன் சாலையில் வாங்கலாம். இணையத்தின் வழி நுழைவுச் சீட்டுகளை வாங்க showtickets.asia எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம். நுழைவுச்சீட்டுகளுக்கான விலை $20, $30, மற்றும் $40. நாளை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும் நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு 8876 1044 எனும் தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொள்ளலாம்.