சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் பாவேந்தர் விழா

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நடத்தும் பாவேந்தர் விழா, இம்மாதம் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு தேசிய நூலகத்தின் 5ஆம் தளத்தில் இருக்கும் அரங்கில் நடைபெறும். 
வளர்தமிழ் இயக்கத்தின் ஒருங் கிணைப்புடன் நடைபெறும் ‘பாவேந்தர் 129 சுழலும் சொற்போர் இலக்கிய விழா’வில் மார்டன் மான்டிசோரியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்துரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். 
மேடைப்பேச்சாளரும் புதுச்சேரி தாகூர் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வருமான முனைவர் நா இளங்கோ சிறப்புரை ஆற்றுவார். 
திரு போப்ராஜ் என்கிற நாகை தங்கராசு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்பதுடன் வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர் இராஜாராம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.
இவ்வாண்டும் உள்ளுர் கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஒருவருக்கு பாவேந்தர் பொற்பதக்க விருது வழங்கிச் சிறப்பிக்கப்படும். 
நிகழ்ச்சியில் பாவேந்தரின் பாடலுக்கான மாணவிகளின் நடனம், பாவேந்தர் எழிலுரை, ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல் வெளியீடு, சுழலும் சொற்போர் விவாத அரங்கம் என பல்சுவை நிகழ்ச்சிகளும் உண்டு.
இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். நிகழ்ச்சி பற்றிய மேல் விவரங்களுக்கு முனைவர் இரத்தின வெங்கடேசனை 90125643 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.