தமிழ்மொழி விழா 2019ன் ஓர் அங்கமாக வாசகர் வட்டம் நடத்தும் 'கவிதையும் காட்சியும்' போட்டியின் இறுதி நிகழ்ச்சி நாளை மறுநாள் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடைபெறவுள்ளது. செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். திரைப்பட நடிகையும் இயக்குநருமான திருவாட்டி ரோகிணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். தகவல்களுக்கு: எம்.குமார் - 91087672.
கவிதையும் காட்சியும்
1 mins read

