சூப்பர் சிங்கர் ஜூனியரில் 2ம் பரிசை வென்றார் சிங்கப்பூர் சூர்யா

விஜய் தொலைக்காட்சி ஒளிவழியின் சின்னஞ்சிறு குரல் தேடலுக்கான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 6’ போட்டியின் இறுதிச் சுற்றில் இரண்டாம் பரிசை வென்றுள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் பாடகர் சூர்யா.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 பாட்டுத்திறன்போட்டியில் கலந்துகொண்டு பலரது பாராட்டுகளையும் பெற்று வந்தனர் சூர்யா ஆனந்த், 13. கடந்த ஆன்டு முதல் அப்போட்டியில் பங்கேற்று வந்த சூர்யா நேற்று தமிழகத்தின் நேரு மைதானத்தில் நடந்த இறுதிச் சுற்றில் கலந்துகொண்டார்.அந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதில், பூவையார், சின்மயி, அனுஷ்யா, அஹானா, சூர்யா மற்றும் ஹிருத்திக் ஆகிய 6 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர்.

இபோட்டியி இறுதியில் முதல் பரிசை ஹிருத்திக் வென்றார். இரண்டாம் பரிசை சிங்கப்பூர் சூர்யா என அனைவராலும் அறியப்படும் சூர்யா வெல்ல, மூன்றாம் பரிசை பூவையார் தட்டிச்சென்றார். மூன்றாம் பரிசாக 10 லட்சம் ரூபாய்கள் (S$20,000) பரிசாகப் பெற்றார். இரண்டாம் பரிசாக 25 லட்சம் ரூபாய்கள் (S$50,000) மதிப்புள்ள வைர நகையை சூர்யா வென்றார். முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய்கள் ($S100,000) மதிப்புள்ள வீடு ஒன்றை ஹிருத்திக் வென்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

09 Aug 2019

சிகரம் மின் அகராதி வெளியீடு