கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூரில் மேடை ஏறுகிறது 'குற்றாலக் குறவஞ்சி'.
முதன்முதலில் 1958ஆம் ஆண்டில் பாஸ்கர்ஸ் ஆர்ட்ஸ் அகாடமியின் சாந்தா பாஸ்கர் இதை மாபெரும் நாட்டிய நாடகமாக மேடையேற்றினார். இப்போது மறுமுறை அவரின் மாணவி அம்புஜா திரு இதே சிற்றிலக்கியத்திற்கு மேடையில் உயிர் கொடுக்கவுள்ளார்.
சிற்றிலக்கியங்களில் ஒன் றான திருக்குற்றாலக் குறவஞ்சி, சுமார் 1718களில் திரிகூட ராசப்பக் கவிராயர் என் பவரால் இயற்றப்பட்டது.
இந்த இலக்கியப் படைப்பு குறவஞ்சி நூல் களுள் பாராட்டுக்குரியதாக விளங்கி வருவதுடன் இப்படைப்பு அக்காலத்தில் நாட்டிய நாடகமாக நடிக்கப்பட்டு வந்திருக்கிறது.
ஆனால் அண்மைக் காலமாக இப்படைப்பு சிங்கப்பூரில் அரங் கேற்றப்படவில்லை. இன்றைய இளம்தலைமுறையினர் இந்த அரும்பெரும் இலக்கிய வகையை அனுபவித்து இன்புற வேண்டும் என்பதற்காக இதனை மேடை ஏற்றுகிறது அகாடமி.
"படைப்பாளிகளுக்கு மொழியைக் கற்பிக்கும் அதே சமயம், நாட்டிய நாடகத்தையும் அதன் ரசம் குன்றாமல் சொல் லும் கடமையையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். பார் வையாளர்கள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கண்டு களிக் கும்போது கதையின் முழு பொருளையும் அறிந்துகொள்வர்," என்கிறார் அகாடமியின் நாட்டிய ஒருங்கிணைப்பாளர் அம்புஜா திரு.
இந்நாடக நிகழ்வு அடுத்த சனிக்கிழமை 11ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு கேட்வே தியேட் டரில் நடைபெறவுள்ளது.

