தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இணைப் பேராசிரியர் சு.வேணுகோபாலின் 'கவிதை கேளுங்கள்' எனும் சிறப்பு உரை நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு, விக்டோரியா ஸ்திரீட் தேசிய நூலகத்தின் 'பாசிபலிட்டி' அறையில் நடைபெறுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூரிலுள்ள குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றும் திரு வேணுகோபால் புதுக்கவிதை திறனாய்வு வரலாறு என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.
மேலும் 6 சிறுகதை தொகுப்பு கள், 4 நாவல்கள் 3 கட்டுரைத் தொகுப்புகள் போன்றவற்றுடன் இலக்கியம் குறித்து 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

