முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'ஓல்ட் சாங் கீ' ரெக்ஸ் பிரதான உணவகம்

முதல் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் 'ஓல்ட் சாங் கீ' ரெக்ஸ் பிரதான உணவகம்

2 mins read
f75f18dc-7f0e-40df-8a34-64ca675b2412
'ஓல்ட் சாங் கீ காஃபி ஹவுஸ் @ ரெக்ஸ்' கடையில் இம்மாதம் 11, 12 தேதிகளில் 'ஸ்பிரிங் ஓ', 'ஃபிஷ் பால் ஆன் ஸ்டிக்', 'சோதோங் ஹெட் ஆன் ஸ்டிக்', 'கறி ஓ' உட்பட சில உணவுப் பொருட்களை $1 மட்டும் செலுத்தி பெறலாம். -

சிறிய கறி பாவ் உணவுக் கடையாகத் தொடங்கிய பிரபல உணவு நிறுவனம், ஓல்ட் சாங் கீ, அதன் முதல் உணவகமான 'ஓல்ட் சாங் கீ காஃபி ஹவுஸ் @ ரெக்ஸ்' கடையின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

ரெக்ஸ் திரையரங்கிற்கு எதிரில் அந்தக் கடை உள்ளது. அந்தப் பகுதியில்தான் முதன் முதலில் 1956 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் சிறிய அளவில் தொடங்கியது.

சிங்கப்பூரில் தொடங்கப்பட்டு வெற்றி நடைபோடும் அந்நிறுவனம், மெர்டேக்கா தலைமுறையினரின் பங்களிப்புக்கு ஒரு நற்சான்று.

இன்று பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் அங்கம் வகிக்கிறது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மொத்தம் 100 கடைகள் உள்ளன.

பெரிய உணவகத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வரும் 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ரெக்ஸில் அமைந்துள்ள உணவகத்திற்குச் சென்று ஓல்ட் சாங் கீ பரிசுப் பொருட்களை வெல்லுங்கள்.

இம்மாதம் 11, 12 தேதிகளில் 'ஸ்பிரிங் ஓ', 'ஃபிஷ் பால் ஆன் ஸ்டிக்', 'சோதோங் ஹெட் ஆன் ஸ்டிக்', 'கறி ஓ' உட்பட சில உணவுப் பொருட்களை $1 மட்டும் செலுத்தி பெறலாம்.

பெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தோர் அடையாள அட்டையைக் காட்டி ஹைனானீஸ் சிக்கன் ரைஸ் பால்ஸ் உணவை இலவசமாகப் பெறலாம். தினமும் 50 பேருக்கு மட்டுமே இந்த சலுகைக் கிடைக்கும்.

$10க்கு மேல் செலவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச 'இனாமல்' குவளை வழங்கப்படும்.

வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள் பழமை தோற்றமுடைய 'இனாமல்' குவளைகளுக்கான வடிவமைப்புப் போட்டிக்காகத் தங்கள் வடிவங்களை இன்ஸ்டாகிராம் மூலம் சமர்ப்பிக்கலாம். rewards@sph.com.sg எனும் மின்னஞ்சல் முகவரியில் பின்னர் அந்த வடிவங்களை 11, 12 தேதிகளில் அனுப்பிவைக்கவேண்டும். ஐந்து வெற்றியாளர்களுக்குத் தலா $50 ஓல்ட் சாங் கீ பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டும்.

ஆண்டிறுதி கொண்டாட்டங்களில் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டு பரிசுப் பைகள், உணவுப் பொருட்களை வெல்லுங்கள். கறி பாவ் பைகள், எஸ்பிஹெச் டவல்கள், மிட்டாய்கள் உட்பட பரிசுப் பொருட்கள் நிறைந்த இயந்திரத்தில் இலவசமாக உங்கள் திறன்களைக் கொண்டு பொருட்களை வெல்லுங்கள்.

'ஸ்வீட்டஸ்ட் மோமன்ட்ஸ்' நிறுவனம் இலவசமாக 100 குவளைக் கேக்குகளை வழங்கவுள்ளது.

எஸ்பிஹெச் சந்தாதாரர்களுக்கென 300 யுனிகார்ன் ஓ பாவ்கள் வழங்கப்படவுள்ளன.

செயலியில் உள்ள மின்=அட்டையைக் காட்டி அந்த இலவச உணவுப் பொருளை 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரைப் பெறுங்கள்.

19/20/21 மெக்கன்சி சாலையில் அமைந்துள்ள ஓல்ட் சாங் கீ காஃபி ஹவுஸ் @ ரெக்ஸ் உணவகத்திற்கு வந்து உணவருந்தி பரிசுகளை வெல்லுங்கள்.

இருப்பு உள்ளவரை மட்டுமே சலுகைகள் செல்லுபடியாகும்.

சலுகைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.