தொழில் தொடங்க, நிதி உதவி ஆலோசனைகள்

‘தொழில் தொடங்குவதும் நிதி பற்றிய ஆலோசனைகளும்’ என்ற தலைப்பில் கடந்த மாதம் 7ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் திரு நாராயண மோகன் (படம்). 

புதிய தொழில் தொடங்குவது, தொழிலை மேம்படுத்துவது, வர்த்த கத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு, வர்த்தகங்களை வெளிநாடுகளில் விரிவுபடுத்துவது, தொழில் தொடர் பான நிதி உதவித் திட்டங்கள் போன்றவை குறித்து 13வது ஆண்டாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார். வங்கிக் கடன் பெறும் வழி முறைகளைப் பற்றியும் கூறிய அவர், அரசாங்கம் வழங்கும் உதவிகள் பற்றியும் குறிப்பிட்டார்.