அதிக அரிசி சாதம்-குறைந்த உடல் பருமன் சாத்தியமில்லை

அதிகமாக அரிசி சாதம் சாப்பிட் டால் உடல் பருமன் குறைந்து விடும் என்பது நிச்சயமல்ல. சுகா தார மேம்பாட்டு வாரியமும் உண வுத் துறை வல்லுநர்களும் இவ் வாறு கூறுகிறார்கள். 

அதிகமாக சோறு சாப்பிடு வதற்கும் குறைவான உடல்  பரு மனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று ஜப்பானிய ஆய்வு ஒன்று அண்மையில் தெரிவித்தது.

ஆனால் இது சிங்கப்பூருக் குச் சாத்தியமானதாகத் தெரிய வில்லை. சாதத்தை அதிகமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக மித மான அளவுக்குச் சோற்றையும் தீட்டப்படாத முழு தானியங்களை அதிகமாகவும் உணவில் சேர்த் துக்கொள்ளும்படி இந்த வாரிய மும் வல்லுநர்களும் ஆலோசனை தெரிவிக்கிறார்கள். 

சாதத்தை அடிப்படையாகக் கொண்ட உணவு வகைகள் உடலில் பருமனைக் குறைக்கின்றன. உடல் பருமன் குறைய அதிகமாக சோறு சாப்பிடும்படி மேற்கத்திய நாடுகளில்கூட பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று அந்த ஜப்பானிய ஆய்வு கூறியது. 

ஆனால் அந்த ஆய்வு சிங்கப்பூருக்குப் பொருந்தாது என்று வாரியம் கருதுகிறது. 

ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு, அரிசி பயனீட்டை அது அடிப்படையாகக் கொண்டு நடத் தப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறது வாரியம். 

சரிசம விகித உணவை உண் ணும் முறையைக் கடைப்பிடித்து எல்லா உணவையும் மிதமான அளவுக்கு உண்பதே சிறந்த முறையாக இருக்கும் என்று வாரியம் பரிந்துரைத்தது. 

தட்டில் பாதி அளவுக்கு பழங் களையும் காய்கறிகளையும் நிரப் புங்கள். கால்வாசி அளவுக்கு புழுங்கல் அரிசி, நார்ச்சத்து ரொட்டி  போன்றவையும்  மீத முள்ள கால்வாசி தட்டில் கடல் உணவு, இறைச்சி, பீன்ஸ் போன் றவையும் இருக்கட்டும். இதுவே சாப்பிடுவதற்கு எளிமையான ஒரு முறை என்று இந்த வாரியம் தெரிவித்து உள்ளது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘சிங்கப்போலிட்டன்' போட்டிக்கான விருதுக்கோப்பைகள். (படம்: ‘சிங்கப்போலிட்டன்' ஃபேஸ்புக் பக்கம்)

08 Sep 2019

மார்பகப் புற்றுநோயை மையப்படுத்திய நூதன அழகுப் போட்டி