கவிமாலையில் முனைவர் செந்தமிழ்ப்பாவை

இம்மாதக் கவிமாலை நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் செந்தமிழ்ப் பாவையின் இலக்கியச் சொற் பொழிவு இடம்பெறுகிறது.

நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை, இரவு 7 மணிக்கு, விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகம், B1 அறையில் நடைபெறவுள்ளது.

 

பிடித்த, வடித்த, படித்த கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம், ‘மௌனக்குரல்’ எனும் தலைப் பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு போன்ற வழக்கமான அங்கங்கள் உண்டு. 

அடுத்தமாத கவிதைப் போட்டித் தலைப்பு ‘ஊடகம்’. சிங்கப்பூர் நற்பணிப் பேரவையின் துணைத் தலைவர் திரு ஜி. சேகர்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற் கிறார். 

மேல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: 98536465