தமிழ் கற்றல் கற்பித்தலில் நவீன ஆய்வுப் போக்குகள்

தமிழ் ‘கற்றல் கற்பித்தல் - நவீன ஆய்வுப்போக்குகள்’ என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத் தரங்கு நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலை யத்தில் நடைபெறவுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண் பாட்டு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை வரவேற்புரை நிகழ்த்துகின்றார். 

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் திரு சாமிக்கண்ணு,  முனைவர் சண்முகம், முனைவர் ஆ.ரா.சிவகுமாரன், முனைவர் சீதாலட்சுமி, முனைவர் சதாசிவம் ஆகியோர் கருத்தரங்கில் உரை யாற்றுகின்றனர். 

மேலும், கற்றல், கற்பித்தல் நவீன ஆய்வுப்போக்குகள் குறித்த திறனாய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பெறு கின்றன. 

கருத்தரங்கம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கருத்தரங்கில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி, சிவகாசி இராஜரத்னம் மகளிர் கல்லூரி, சென்னை சோகா இகெதா கலை, அறிவியியல் மகளிர் கல்லூரி, சென்னை செம்மூதாய் பதிப்பகம் ஆகியவை இணைந்து படைக் கின்றன.