செய்முறை வசதிகளுடன் புதிய அறிவியல் நிலையம்

ஜூரோங் லேக் கார்டனில் அமையவுள்ள புதிய அறிவியல் நிலையம் 2025ஆம் ஆண்டுவாக் கில் தயாராகிவிடும் என்று கூறப் படுகிறது. கூடுதல் கண்காட்சிகள், பார்வையாளர்கள் ஆய்வுகளை நடத்திப் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஆய்வகங்கள் போன்ற வற்றை அதில் எதிர்பார்க்கலாம்.

தண்ணீர் முகப்புக்கு அருகில் அமைக்கப்படவுள்ள அந்த நிலை யத்திற்குள்ளாகவே இயற்கை, அறிவியல் ஆகியவற்றை பார்வை யாளர்கள் எளிதில் ஆய்வு செய்யும் விதத்தில் கூடுதல் வெளிப்புற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஜூரோங் லேக், இயற்கை நிலப்பகுதி ஆகியவற்றின் கலவை யாக அறிவியல் நிலையத்தின் வடிவமைப்பு இருக்கும்.

சைனீஸ் கார்டன் எம்ஆர்டி நிலையத்துக்கு அருகில் அமைய வுள்ள புதிய அறிவியல் நிலையம் பொழுதுபோக்குடன் கூடிய கல்விக் கழகமாக உருவெடுக்க உள்ளது. ஹோட்டல், உணவகங் கள், கடைகள், சுற்றுலா இடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய  7 ஹெக்டர் நிலப்பரப்பிலான மேம்பாட்டுக்கு அருகில் ஜூரோங் லேக் வட்டாரத்தில் இந்த அறிவியல் நிலையம் அமைகிறது.

“பள்ளிகளில் தேர்வுகளை மையப்படுத்தும் முறையைக் குறைக்க விரும்புவதால் ஆய்வு அடிப்படையிலான பயன்பாட்டு கல்வி முறைகள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய அறிவியல் நிலையம் பயன்பாட்டு அடிப்படையிலான பெரிய வகுப்பறையாக அமையும்,” என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையத்தை நேற்று முன்தினம் பார்வையிட்ட கல்வி அமைச்சர் ஓங் யி காங் கூறினார். 

புதிய அறிவியல் நிலையத்தில் மாணவர்கள் செய்முறைப் பயிற்சிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு வசதிகள், பயிலரங்குக்கான இடங்கள் போன்றவை பெரியதாக அமைக்கப்படும் என்றும் கூறப் பட்டது. 

டிஎன்ஏ தொடர்பான கண் காட்சிகளைப் பார்த்த உடனே டிஎன்ஏ ஆய்வுகளை மேற் கொள்வது, மனித இயந்திரங்கள் தொடர்பான கண்காட்சிகளைப் பார்த்ததும் ஆளில்லா வானூர் தியை இயக்குவது தொடர்பான நிரலிட முயற்சி செய்தல் போன் றவை உள்ளிட்ட செய்முறைப் பயிற்சிகளை உடனடியாக மேற் கொள்ள ஏற்ற வசதிகள் புதிய நிலையத்தில் உருவாக்கப்படும். 

புத்தாக்க கண்டுபிடிப்புகளின் மாதிரியைச் செய்து பரிசோதிக்க வசதியாக முப்பரிமாண அச்சு இயந்திரம் ஒன்றும் இங்கு அமைக்கப்படும். புதிய நிலையத் தின் வடிவமைப்பையும் இந்த நிறுவனம்தான் உருவாக்குகிறது. 

2019-05-26 06:10:00 +0800

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon