செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரே இந்திய இசைச் செயலி

செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரே இந்திய இசைச் செயலி

1 mins read
c9f5c06c-e670-4f1f-8cfc-7e0f8d519407
-

இயற்கையிலேயே பலருக்குப் பாடுவதற்கான குரல் வளம் அமைந்திருந்தாலும் அதனைச் செம்மைப்படுத்துவதற்குப் பயிற்சியும் முயற்சியும் தேவைப்படுகின்றன. சுயமாகப் பயிற்சி செய்ய விரும்புவோருக்குக் கைகொடுக்க 'நாத்சாதனா' என்ற செயலி முற்படுகிறது.

குரலில் ஸ்வரஸ்தானம் சரியாக உள்ளதாக என்பதைக் கண்டுபிடிக்க உதவுவதற்கான தொழில்நுட்பக் கூறுகள் இந்தச் செயலியில் உள்ளன. அத்துடன், செயலியைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு உகந்த ஸ்ருதியைத் தேர்ந்தெடுத்து பயிற்சி செய்யலாம்.

செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரே இசைச் செயலியாக இது இருக்கும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் செயலியை வெளியிடப்போவதாக கூறிய அதன் மேம்பாட்டாளர் சந்தீப் ரந்தா, பயனீட்டாளர்களின் பாடும் குரலுக்கு ஏற்றாற்போல் 'தப்லா' இசைக்கருவி செயலியில் ஒலிக்கும் என்று கூறினார்.

அனைவராலும் குருகுலத்தில் தங்கியிருக்கவோ இசைப் பள்ளிக்குச் செல்லவோ முடியாது என்பதால் இந்தச் செயலியை உருவாக்கினார் திரு ரந்தா.