ஆபாச விளம்பரங்கள் குறித்த புகார்; இந்திய ரயில் சேவை பதில்

ஆபாச விளம்பரங்கள் குறித்த புகார்; இந்திய ரயில் சேவை பதில்

1 mins read
8a19ab0f-a3e3-4d82-8d27-43e4f8ade789
-

இந்திய ரயில்வே சேவைத்துறையின் இணையத்தளத்தில் ஆபாச விளம்பரங்கள் அடிக்கடி தோன்றுவதாக இணையவாசி ஒருவர் டுவிட்டரில் புகார் செய்துள்ளார். இத்தகைய விளம்பரங்களால் எரிச்சலும் அவமானமும் அடைவதாக ஆனந்த் குமார் என்ற அந்நபர் தமது பதிவில் குறிப்பிட்டார்.

புகாருக்குப் பதிலளித்த இந்திய ரயில்வே சேவைத்துறை, தனது தளத்தில் விளம்பரங்களை ஏற்ற கூகல் மற்றும் 'ஏடிஎக்ஸ்' கருவிகளைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. பயனீட்டாளர்கள் செல்லும் இணையத்தளங்களின் பகுதிகளான 'குக்கீஸ்'-உடன் தொடர்பான விளம்பரங்களை அந்தக் கருவிகள் காட்டுவதாக ரயில்வே சேவைத்துறை 'டுவீட்' செய்தது.

வியாழக்கிழமை காலைக்குள் அந்த டுவிட்டர் பதிவு 20,000க்கும் அதிகமான 'லைக்'குகளைக் குவித்தது. அத்துடன் அந்தப் பதிவு 7,500க்கும் அதிகமாகப் பகிரப்பட்டது. ஆபாச விளம்பரங்களைக் காணச் சகிக்க முடியவில்லையென்றால் முதலில் ஆபாசத் தளங்களுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது எனச் சொல்லாமல் சொன்ன அந்தப் பதிவு இணையவாசிகளைச் சிரிப்பில் ஆழ்த்தியது.