அதிநவீன தொழில்நுட்ப முறைகளைக் கொண்டு மாறுபட்ட சைவ பதார்த்தங்களைத் தயாரிக்கும் 'இம்பாசிபல் ஃபுட்ஸ்' நிறுவனம், 'டெலிவரூ' செயலியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அதிக தெரிவுகளை வழங்குகிறது. ஒரே விதமான உணவைச் சாப்பிட்டு அலுத்துப் போன வாடிக்கையாளர்கள், 'நாசி லெமாக்', 'பிட்சா' போன்ற பல்வேறு பதார்த்தங்களைத் தேர்ந்தெடுக்கலாம்; அவர்களின் வாசற்படியில் உணவுகள் நேரத்திற்கு வந்து சேரும். மே 25ஆம் தேதியிலிருந்தே 'டெலிவரூ' வாடிக்கையாளர்கள் 'இம்பாசிபல் ஃபுட்ஸ்' நிறுவனத்திலிருந்து உணவுகளை வாங்க முன்பதிவு செய்யலாம்
2018ஆம் ஆண்டில் மட்டும் சைவ உணவுகளின் எண்ணிக்கை 83 விழுக்காடு கூடியதாக பிரிட்டனில் தளம் கொண்டிருக்கும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதம் சிங்கப்பூருக்குள் கால்பதித்த 'இம்பாசிபல் ஃபுட்ஸ்', உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது. ரத்தம் சொட்டும் மாமிசத் துண்டுகளைப் போல இருக்கும் சைவ பதார்த்தங்களைத் தயாரித்த இந்நிறுவனம் உலகத்தை வியக்க வைத்தது.

