கதைக்களத்தில் முனைவர் எச்.எம். சலீம்

கதைக்களத்தில் முனைவர் எச்.எம். சலீம்

2 mins read

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் நடத்தும் கதைக்களம் நிகழ்ச்சி, நாளை ஞாயிற்றுக் கிழமை 2=6=2019 அன்று, மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் ஜாமியா சிங்கப்பூரின் துணைத் தலைவரும் ஆய்வாளரும் பல நூல்களை எழுதியுள்ள எழுத் தாளருமான முனைவர் எச்.எம். சலீம் 'சிங்கப்பூர் புனைவு வெளி' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

உள்ளூர் எழுத்தாளர் அறி முக அங்கத்தில் சிங்கப்பூரின் கலாசார விருது பெற்ற கவிஞர் இக்பாலைப் பற்றியும் அவருடைய நூல்களைப் பற்றியும் இந்த மாதம் தெரிந்துகொள்ளலாம்.

ஜூலை மாதச் சிறுகதை, சிறுகதை விமர்சனப் போட்டி களுக்கு 28.6.19 வெள்ளிக் கிழமைக்குள் 250 முதல் 300 சொற்களுக்குள் படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு kathaikalam.astw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ரொக்கப் பரிசுகளும் புத்தகப் பரிசுகளும் உண்டு.

"பாலு அழுது, கத்துகிற சத்தம் பக்கத்து வகுப்பறையில் கேட்கிறது" என்ற வரியில் மாணவர்கள் சிறுகதையினைத் துவங்க வேண்டும்.

"எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் நீ இந்தக் காரியத்தை செய்திருக்கியா?" எனும் வரி யிலோ அல்லது வேறு வரியிலோ பொதுமக்கள் சிறுகதையினைத் துவக்கி போட்டிக்கு எழுதி அனுப்பலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்: பெக் கியோ சமூக மன்றம் -

3 வது தளம், 21, GLOUCESTER ROAD.

மேல்விவரங்களுக்கு: www.singaporetamilwriters.com/kathaikalam/

திருமதி கிருத்திகா, சி.த.எ.க. துணைச் செயலாளர் kiruthikavirku@gmail.com