ஜாமியா இஸ்லாமியப் பள்ளிக்கு நன்கொடை அளித்த மலபார் நகைக்கடை

ஜாமியா இஸ்லாமியப் பள்ளிக்கு நன்கொடை அளித்த மலபார் நகைக்கடை

1 mins read
e79ed98e-c4f9-416f-aebe-4bd19dae7a4c
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின் தலைவர் டாக்டர் முகமது ஹஸ்பி அபு பக்கரிடமும் (வலக்கோடி) தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் முன்னிலையில் (வலமிருந்து 2வது) ஐயாயிரம் வெள்ளி நன்கொடைக்கான காசோலையை மலபார் நகைக்கடை வைரப் பிரிவின் மண்டலத் தலைவர் சாஃபிக் கன்னம்குளம், மலபார் நகைக்கடையின் உதவி கிளைத் தலைவர் சஞ்சித் தரவத் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்கிறார். ஜாமியா சிங்கப்பூர் இஸ்லாமிய பள்ளியின் துணைத் தலைவர் ஹெச்.எம்.சலீம் உடன் உள்ளார். (இடக்கோடி) -

'தி சர்ச் ஆஃப் ஜீசஸ்' கிறைஸ்ட் ஆஃப் லேட்டர் டே செயிண்டஸ்' தேவாலயமும் ஜாமியா சிங்கப்பூர் இஸ்லாமியப் பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்வில் மலபார் தங்க & வைர நகைக்கடையினர் கலந்துகொண்டனர்.

மே 27ஆம் தேதி நடந்த இந்த இஃப்தார் விருந்து நிகழ் வில் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 1,500 பேருக்கு இஃப்தார் விருந்து அளிக்கப்பட்டது.

சமூக பொறுப்பு நடவடிக்கை யில் ஆர்வமாக பங்காற்றி வரும் மலபார் நகைக்கடை இந்நிகழ்வில் ஜாமியா இஸ்லாமியப் பள்ளிக்கு 5,000 வெள்ளி நன்கொடை வழங்கியது.