அன்வார் அல்-ஹிமாம் நிறுவனத்தின் உம்ரா சேவை

அன்வார் அல்-ஹிமாம் நிறுவனத்தின் உம்ரா சேவை

1 mins read
ab6efcf2-7980-42be-892a-b857c139301a
சிங்கப்பூர் அலுவலக நிறுவனரான ஃபஹ்ருத்தீன் மாலிமுடன் மெக்கா சவூதி அரேபியா அலுவலகத்தின் நிறுவனர் காலித் சாலிஹ் அல்ஹுஸயீ. படம்: அன்வார் அல்-ஹிமாம் -

சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் உரிமம் பெற்ற அன்வார் அல்-ஹிமாம் உம்ரா & விடுமுறைகள் நிறுவனம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இந்நிறுவனம் அல்ஃபா பயண & சுற்றுலா நிறுவனம் என்று அழைக்கப்பட்டது. அல்ஃபா நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர், மலேசியாவில் செயல்பட்டு வந்தது. சவூதி அரேபியாவில் இதே பெயரில் ஓர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உம்ரா விசா சேவை வழங்கும் முதல் சிங்கப்பூர் நிறுவனம் என்ற பெருமையும் அன்வார் அல்-ஹிமாம் நிறுவனத்திற்கு உண்டு.

கடந்த 20 ஆண்டுகளாக சவூதி அரேபியாவுடன் இந்நிறு வனம் நல்ல, வலுவான பங்கா ளித்துவத்தைக் கொண்டு உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பயண ஏற்பாடுகளைத் தயார் செய்ய அன்வார் அல்-ஹிமாம் நிறுவனத்தினர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.