(காணொளி): தமிழில் பாடி வியக்க வைக்கும் சீன ஆடவர்

(காணொளி): தமிழில் பாடி வியக்க வைக்கும் சீன ஆடவர்

1 mins read
937a5a4a-03fa-4447-b39b-1a6a8f8e7102
-

பேச்சுவழக்கில் பலருக்குத் தமிழ் தடம்புரளலாம். ஆனால் மலேசியாவைச் சேர்ந்த இந்தச் சீன இன ஆடவர் ஆண் குரலிலும் பெண் குரலிலும் தமிழிலேயே பாடி அதிசயிக்க வைக்கிறார். 'உயிரே' திரைப்படத்தில் பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி பாடிய 'நெஞ்சினிலே நெஞ்சினிலே' தன்னைத் தமிழ் இசைக்கு ஈர்த்ததாக சியா கூறினார்.

ரசிகனாக மட்டும் இருந்திராமல் தன்னைப் பாடகராக்கிக் கொண்டார் சியா. இந்தியாவின் ஸீ தொலைக்காட்சியில் இடம்பெற்ற 'சரிகமபா' போட்டியில் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்திலிருந்து மாங்குயிலே பூங்குயிலே திரைப்படப் பாடலைப் பாடி பார்ப்பவர்களை வியக்க வைத்தார்.

(நன்றி: Astro உலகம்)