குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு

குளிரான அலுவலகங்கள் ஆண்களுக்கு நல்லது, ஆனால் பெண்களுக்கு அவ்வளவு நல்லதல்ல: ஆய்வு

1 mins read
a4326e96-76a8-49ba-9b24-7848c845b480
-
Google News Preferred Icon

ஒருவரின் வேலைத் தரம் அவருடைய அலுவலகத்தின் வெப்பநிலையைப் பொறுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, பெண்கள் சற்று இதமான வெப்பம் கொண்ட வேலை இடத்தில் நன்றாகப் பணிபுரிகிறார்கள் என்றும் சற்றுக் குளிர் அதிகமான அலுவலகத்தில் ஆண்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. 'பிஎல்ஒஎஸ் ஒன்' எனும் ஆய்விதழ் வெளியிட்ட இந்த ஆய்வுக்காக, இரு பாலாரும் உள்ளடங்கிய 500 பேருக்கு வெவ்வேறு வெப்பநிலையில் சில வேலைகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் சில கணிதம், வாய்மொழி சார்ந்தவையாக இருந்தன.

'த கார்டியன்' வெளியிட்ட செய்தியின்படி, ஆண் பெண் இருவரும் கொண்ட அலுவலகத்தின் முதலாளிகள், பெண்களின் வேலைத் தரத்தை உயர்த்த அலுவலகத்தின் வெப்பநிலையை அதிகரிப்பது பற்றி பரிசீலனை செய்ய உள்ளனர்.

கூடுதல் வெப்பநிலையில் கண்காணிக்கப்பட்ட பெண்களின் வேலைத்தர உயர்வு, அதே வெப்பநிலையில் ஆண்களின் வேலைத்தரம் குறைந்திருந்த அளவைக் காட்டிலும் அதிகம் என்பதே இதற்கு காரணம்.

இது வேலை இடங்களில் குளிர் தாங்க முடியாமல் மொத்தமான மேல் சட்டைகளில் தம்மை ஒளித்துகொள்ளும் பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி.