'பபுள் டீ' பானத்தை அருந்திய சிறுமிக்கு 5 நாள் மலச்சிக்கல்

'பபுள் டீ' பானத்தை அருந்திய சிறுமிக்கு 5 நாள் மலச்சிக்கல்

2 mins read
c4378614-e6c1-48eb-a23d-67b801114427
-

சீனாவில் 'பபுள் டீ' பானத்தை அருந்திவிட்டு ஐந்து நாட்களாக மலச்சிக்கலால் அவதி யுற்ற 14 வயது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவருகிறார். ஸிஜியாங் மாகாணத்தில் வசிக்கும் அவரால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. அதோடு வயிற்றுவலியால் அவர் அவதியுற்றார். கடந்த மாதம் 28ஆம் தேதி அச்சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.அச்சிறுமியின் உடலில் ஏற்பட்ட செறிமானக் கோளாற்றுக்கான காரணத்தைக் கண்டறிய சிரமப்பட்ட மருத்துவர்கள், 'சிடி ஸ்கேன்' எனப்படும் மருத்துவப் பரிசோ தனையை மேற்கொண்டனர். அவரது வயிற்றுப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான உருண்டை வடிவிலான நிழல் இருப்பதுபோலப் பரிசோதனையில் தெரிய வந்தது.

அந்தச் சிறுமி அருந்திய 'பபுள் டீ' பானத்தில், மாவால் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான உருண்டைகள் செறிமானமாகாமல் இருந்ததையே 'சிடி ஸ்கேனில்' பதிவான நிழல் காட்டியதாக மருத்துவர்கள் அறிந்தனர். தாம் என்ன சாப்பிட்டோம் என்பது பற்றி தொடக்கத்தில் வெளியில் சொல்ல தயங்கிய அச்சிறுமி, கடைசியில் உண்மையைக் கக்கினார்.

மலச்சிக்கல் ஏற்படுவதற்கு ஐந்து நாட்கள் முன்னதாக வெறும் ஒரு குவளை 'பபுள் டீ' பானத்தைத் தாம் அருந்தியதாக அவர் சொன்னார்.ஆனால் அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், பெற்றோர் திட்டுவர் என்ற காரணத்திற்காக உண்மையை மறைக்கிறார் எனச் சந்தேகித்தார்.மலச்சிக்கல் பிரச்சினை மோச மடையும் அளவிற்குப் போவதற்கு அவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அதிக அளவிலான மாவு உருண் டைகளைச் சாப்பிட்டிருக்க வேண்டும் என்று மருத்துவர் கணித்தார். மலச்சிக்கலைக் குணப்படுத்த அச்சிறுமிக்கு மருந்து எழுதிக் கொடுக்கப்பட்டது.

'பபுள் டீ' பானத்தில் சேர்க்கப் படும் மாவால் செய்யப்பட்ட உருண் டைகள் உடலில் செறிமானமாவ தற்கு சிரமம் என்று மற்றொரு மருத்துவர் ஒருவர் கூறினார்.