‘தமிழும் செயற்கை நுண்ணறிவும்’ கலந்துரையாடல்

செயற்கை நுண்ணறிவு என்பது நமது வருங்கால தொழில்நுட்பம். உலகமே இன்று பல ஆராய்ச்சிகள் மூலம் இதை நோக்கி செல்கிறது. 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வளர்ந்து வரும் செயற்கை நுண் ணறிவு பல புதிய சாத்தியங்களை வெளிக்கொணரும்.

நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை யும் இணைந்து நடத்தும் தமிழ் + AI எனும் நிகழ்ச்சி, செயற்கை நுண்ணறிவுடன் தமிழ் மொழி இணைவதனால் வரும் புதிய தொரு பரிமாணத்தை வழங்க விருக்கிறது.

கர்நாடக இசை, தமிழ் இலக்கி யம் ஆகியவற்றுக்குச் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத் தப்படலாம் என்பதை வெளிப்படுத் தும் வகையில் நான்கு முன்மாதிரி களை பல்கலைக்கழக மாணவர் கள் உருவாக்கி உள்ளனர்.

புது இசையை உருவாக்குதல், ஏற்கெனவே இருக்கும் காப்பியங் களை வைத்துச் செயற்கை நுண் ணறிவு மூலம் புதுக்காப்பியங்கள் உருவாக்குதல் போன்றவற்றிற் கான முன்மாதிரிகளை இந்நிகழ் வில் காண்பிப்பதன் மூலம், வளர்ந்து வரும் விஞ்ஞானத்தை எவ்வாறு நம் மொழியுடன் இணைத்துப் பயன்பெறலாம் என்பதை அறிந்துகொள்ளலாம்.

அதைத்தொடர்ந்து, தமிழ் மொழியின் ஆக்கபூர்வ வளர்ச் சிக்குச் செயற்கை நுண்ணறிவு வழிவகுக்குமா என்பதை விவா திக்கும் ஒரு கலந்துரையாடலும் உள்ளது. எனவே, பலரின் வியப் பிற்குரிய செயற்கை நுண்ண றிவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் தமிழ்மொழி இன் றைய காலத் தொழில்நுட்பத்தோடு இணைந்து வளருவதைப் பாராட் டுவதற்கும் தமிழ்+AI நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்.

செய்தி: சாந்தினி சீனிவாசன் 

நாள்/நேரம்: 15 ஜூன் 2019, சனிக்கிழமை, காலை 9.30 மணி

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்

பதிவு செய்ய: bit.ly/TamilAI2019