நூலகக் கணினியில் தமிழிலேயே  தமிழ் நூல்களைத் தேடும் வசதி

தேசிய நூலக வாரியத்தின் அனைத்து நூலகங்களிலும் தமிழ் நூல்களைத் தேடுபவர்கள் நூலின் பெயரையோ எழுத்தாளரின் பெயரையோ அங்குள்ள கணினி களில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துதான் இதுவரை தேட வேண்டியிருந்தது.

அவ்வாறான தேடுதல்களுக்குக் கிடைக்கும் பதில்கள் 100 விழுக் காடு சரியாக இருப்பதில்லை. மேலும், தட்டச்சு செய்யப்படும் பெயர்கள் கணினித் திரையில் ஆங்கிலத்திலேயே தோன்றும்.

இப்போது அந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. முரசு அஞ்சல் மென் பொருளைக் கொண்டு உருவாக்கப் பட்டிருக்கும் தேடுதல் இயந்திரத் தின் வழி தமிழிலேயே தட்டச்சு செய்து தேடும் வசதியைத் தேசிய நூலக வாரியம் அறிமுகம் செய்து உள்ளது.

பயனாளர்களுக்கு தமிழில் தட் டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேடுதல் இயந்திரத்தில் தமிழ் என மொழித் தேர்வை செய்ய வேண்டும். அதன்பிறகு நூலின் பெயரையோ நூலாசிரியரின் பெயரையோ ஆங்கிலத்தில் தட் டச்சு செய்யும்போது திரையில் தமிழிலேயே நூல்களின் பெயர்கள் காட்சியளிக்கும்.

உதாரணத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்களைத் தேடும் ஒருவர் இதற்குமுன் Jeyamohan, Jeyamogan, Jayamohan, Jayamogan எனப் பலவாறு தட்டச்சு செய்வார்.

திரையிலும் அது ஆங்கிலத் திலேயே தெரியும். ஆனால், அவரது பெயர் ஆங்கிலத்தில் எவ் வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து ஒருவரது தேடல் தோல்வியில் முடியலாம், அல்லது அவரது எல்லா நூல்களும் தேடலில் கிடைக்காமல் போகலா​ம்.

ஆனால் இப்போது முரசு அஞ்சல் மென்​பொருளைச் சுட்டி விட்டு ஒருவர் ஆங்கிலத்தில் தட் டச்சு செய்யும்போது அதற்கு இணையான “ஜெயமோகன்” என்ற சொல் திரையில் தமிழிலேயே தெரியும்.

அவ்வாறு தேடும்போது ஜெய மோகனின் அனைத்து நூல்களும் தேடல் முடிவுகளாக வெளிவரும். தங்களுக்கு விருப்பமானதைப் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

“தமிழ் நூல்கள் அதிகம் இரவல் வாங்கப்படவேண்டும். நிறைய அளவில் பயனாளர்களால் படிக்கப்பட வேண்டும் என்ற எங்களின் தொடர் முயற்சியின் இன்னொரு வெளிப்பாடுதான் இந்த முரசு அஞ்சல் மென்பொருள் மூலமாகத் தேடுதலை எளிமை யாக்கும் ஏற்பாடு,” என்றார் தேசிய நூலக வாரியத் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் திரு அழகிய பாண்டியன்.

“நூலகத் தேடல் இயந்திரங் களில் பொருத்தப்பட்டுள்ள முரசு அஞ்சல் மென்பொருள் ​மூலம் இனி தமி​ழிலேயே நூல்களைத் தேட முடியும். அது உங்கள் தேடலை 100 விழுக்காடு சரியான தாக ஆக்கும்.” என்றும் அவர் கூறினார்.

முரசு அஞ்சல் மென்பொருள் கல்வி அமைச்சின்கீழ் செயல்படும் பள்ளிகளிலும் பயன்படுத்தப்படு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!