விசை 2.0 பயிலரங்கில் இளம் படைப்பாளர்கள்

தேசிய கலைகள் மன்றத்தின் ஆதரவுடன் தமிழ் முரசு தொடங்கி யுள்ள வளரும் படைப்பாளர்களுக் கான விசை படைப்பிலக்கியத் திட்டத்தின் இரண்டாவது கட்ட பயிலரங்குகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன. 

தற்காலப் தமிழ்ப் படைப்பிலக் கியத் துறையில் வாசகர்களாலும் விமர் சகர்களாலும் அடையாளம் காணப்பட்ட இளம் படைப்பாளர் களில் இருவரான சி.சரவண கார்த்திகேயன், சாம்ராஜ் ஆகி யோர் பயிலரங்குகளை வழிநடத்த வுள்ளனர். ஜூலை 6, 20 ஆகிய தேதிகளில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை நடை பெறும் சிறுகதை, கவிதைப் பயி லரங்குகளில் பங்கேற்க விரும்பு பவர்கள் tamilmurasu@sph.com.sg என்ற மின்னஞ்சல் முக வரியில் வரும் 30ஆம் தேதிக்குள்  பதிவு செய்யவும். படைப்புகளையும் மற வாமல் அனுப்பி வைக்கவும்.

கட்டணம் மாணவருக்கு: $10, பெரியவருக்கு: $15. காலை, மதிய உணவு வழங்கப்படும்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

09 Aug 2019

சிகரம் மின் அகராதி வெளியீடு