மலேசியாவில் ‘முசாங் கிங் செண்டோல்’ அமோக விற்பனை

டுரியான் பழம். கடலை. தேங்காய்ப்பால். தித்திபான ‘குலா மலாக்கா’ ( பனை வெல்லம்).  இவற்றால் செய்யப்படும் மலாய் இனிப்புப் பண்டம்  ‘செண்டோல்’. சிங்கப்பூரின் பல உணவுக் கடைகளில் விற்கப்படும் இதனைச் சாப்பிட  நீங்கள் 38 ரிங்கிட் (12.60 வெள்ளி) செலவு  செய்வீர்களா?

மலாக்காவின் பண்டார் ஹிலிர் வட்டாரத்தில்  இந்த ‘முசாங் கிங்' செண்டோலின் விலை அளவுக்கு அதிகமாக இருப்பதாக நினைத்த வாடிக்கையாளர் ஒருவர், செண்டோலுக்கான ரசீதின் படத்தைப்  ஃபேஸ்புக்கில்  பதிவேற்றம் செய்து தமது காட்டத்தை வெளிப்படுத்தினார். செண்டோல் கடையின் வியாபாரத்தை அந்த வாடிக்கையாளர் கெடுக்க நினைத்தாரோ இல்லையோ,  அவரது ஃபேஸ்புக் பதிவுக்குப் பின்னர் கடையின் வியாபாரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

தமது செண்டோல்களுக்காக மிகவும் தரம்வாய்ந்த டுரியான் பழங்களை ஜோகூரிலிருந்தும் பாகாங்கிலிருந்தும் தருவிப்பதாக கடையின் உரிமையாளர் முகம்மது அரிஃபின், ‘த ஸ்டார்’ செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற சிகரம் மின் அகராதி வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோருடன் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் விக்ரம் நாயர். படம்: சிங்கைத் தமிழ்ச் சங்கம்

09 Aug 2019

சிகரம் மின் அகராதி வெளியீடு